அணியில் இடம் கிடைக்கும் வகையில் நான் ரன் சேர்க்கவில்லை: மேக்ஸ்வெல்

0
161

201608041956268107_I-did-not-score-enough-runs-Maxwell_SECVPFஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருப்பவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த நான்கு வருடங்களாக ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்திருந்தார்.

ஆனால், இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று மேக்ஸ்வெல் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ரோட் மார்ஷ் ‘‘மேக்ஸ்வெல் கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடினார். கடந்த 7 போட்டிகளில் 0, 6, 0, 0, 3, 46, 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த ஆண்டு 396 ரன்கள் குவித்ததுடன், 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்’’ என்று கூறியிருந்தார்.

இநத கருத்தை மேக்ஸ்வெல் தற்போது ஒதுதுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘என்னுடைய கடைசி 10 ஒருநாள் போட்டிகளை நீங்கள் பாத்திருந்தால், நான் போதுமான அளவு ரன்கள் அடிக்கவில்லை. முதல் 6 இடத்திற்குள் இடம் பிடிக்க வேண்டும் என்றால் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும் என்றார்கள். நான் விரும்பியதுபோல் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையில் என்னால் நன்றாக பந்து வீசி, ரன்களும் குவித்திருக்க இயலும். ஆனால், வாய்ப்பு கிடைத்திருக்கும்போது அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அணியில் சேர்க்கப்படாததற்கான முழுப் பொறுப்பையும் நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார்.

LEAVE A REPLY