(Poem) ஒலிம்பிக் போட்டியும் எலும்புக்குப் போட்டியும்

0
80

(Mohamed Nizous)

அரசுகள் சேர்ந்து ஒலிம்பிக் போட்டி
அங்கு
அரசியல் சார்ந்த எலும்புக்கு போட்டி இங்கு

பதக்கம் கிடைக்க
பாதையில் மரதன் அங்கு
பதவிகள் கிடைக்க
பாதையில் ம.ரா. இங்கு

கு’Rio’டு விளையாடி
முறையாக வெல்வார் அங்கு
வெ’Rio’யோடு வீதியிலே
குறை கூறித் திரிவார் இங்கு

ஓட்டத் திறமையை
காட்டும் காட்சி அங்கு
ஓட்டை உடைசலுடன்
ஓட்டுவார் ஆட்சியை இங்கு.

பாரம் தூக்கி
வீரம் காட்டுவார் அங்கு
வீர வன்சகள்
வெறும் வாயால் தூக்குவார் இங்கு

பல சனம் சேர்ந்து
பார்க்கும் ஒலிம்பிக் அங்கு
பல சேனா சோர்ந்து
பாதையில் புலம்பல் இங்கு

அங்கு
ஒலிம்பிக் போட்டி முடியும்
இங்கு
குழம்பிய பார்ட்டி தொடரும்..

LEAVE A REPLY