சூடானில் கன மழைக்கு 76 பேர் பலி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

0
156

201608041730451393_Sudan-floods-kill-76-destroy-thousands-of-houses_SECVPFசூடானில் கன மழைக்கு 76 பேர் பலியாகி உள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூடானில் கடந்த சில தினங்களாக கன பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. சூடானில் உள்ள 18 மாகாணங்களில் 13 மாகாணங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நைல் நதி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த கன மழைக்கு இதுவரை 76 பேர் பலியாகி உள்ளதாக சூடான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூடானில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கிராம பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY