ராஜபக்ஷ காலத்தில் 150,000 டொலர் பெறுமதியான தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரங்கள் இறக்குமதி: ஹரீன் பெர்­னாண்டோ

0
171

Harin-Fernandoதொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்கள் இறக்குமதி செய்துள்ளதாக தொலை­தொ­டர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமைக் காரியாலயத்தில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான உபகரணங்கள் நாட்டுக்கு தேவையில்லை. குறித்த உபரணங்களை மீண்டும் விநியோகஸ்தர்களுக்கு திருப்பி அனுப்ப தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY