திரைப்பட DVDகளை தடைசெய்ய வேண்டும்: ஞானசார தேரர்

0
86

Galagoda-Aththe-Gnanasara‘ஹோ கான பொகுண’ என்ற சிங்களத் திரைப்படம், புத்தரின் தர்ம போதனையை தவறாக சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாக பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் இன்று(04) முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த காலங்களில், திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர், பிக்குமார்களுக்கு திரையிடப்பட்டு காண்பிக்கப்படும். எனினும் இந்தத் திரைப்படம் அவ்வாறு காண்பிக்கப்படவில்லை.

சிறுவர்களுக்கான திரைப்படம் என்பதால் இது தொடர்பில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், சூட்சுமமான முறையில் தவறான கருத்தை பிரதிபலிக்கும் இந்தத் திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.

இது தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், டீ.வீ.டிக்களில் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களிடம் பரவுவதையாவது தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மேலும் கூறினார்.

-ET-

LEAVE A REPLY