தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் பதிவாளராக எம்.ஐ. நௌபர் நியமனம்

0
298

(எம்.எம்.ஜபீர்)

1e8111eb-b6b4-484a-8900-0a685aa14264இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராக பிரதி பதிவாளராக கடமையாற்றிய எம்.ஐ. நௌபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 01ம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணி பட்டத்தினையும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வியாபார முதுமாணி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.நிர்வாகத்துறையில் இந்தியா ,மலேசியா ,தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றதுடன் இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவனத்தில் பயிற்சியையும் பெற்றுள்ளார்.

ஆரம்பக்கல்வியை சென்றல்கேம் ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் பயின்றுள்ளார்.இவர் அரச அங்கீகாரம் பெற்ற ஆங்கில -தமிழ் மொழிபெயர்ப்பாளரும் அகில இலங்கை சமாதான நீதவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY