டெஸ்டில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஸ்டார்க்

0
130

201608041635158157_Australia-Fast-Bowler-Mitchell-Starc-gets-100-test-wickets_SECVPFஇலங்கை- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று காலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் கருணா ரத்னே, கவுசல் சில்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருணா ரத்னே ரன்ஏதும் எடுக்காமல் ‘கோல்டன்’ டக் பெற்றார்.

அடுத்து குசால் பெரேரா களம் இறங்கினார். கவுசல் சில்லா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் ஸ்டார்க்தான் வீழ்த்தினார். இதன்மூலம் 27-வது போட்டியில் 99 விக்கெட்டுக்களை வீழ்த்தி 100-வது விக்கெட்டுக்காக காத்திருந்தார்.

இலங்கை அணியின் ஸ்கோர் 184 ரன்னாக இருக்கும்போது குசால் மெண்டிஸ் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். இதன்மூலம் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஸ்டார்க் அசத்தினார். அத்துடன், காலே மைதானத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் 7 மாதங்கள் ஓய்விற்கு பின் ஸ்டார்க் பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

LEAVE A REPLY