வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

0
96

4e89e51dde71513db12827861c900ca7_L-600x330தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று(04) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் மற்றும் எரிபொருட்களை உரிய முறைகளின்றி, தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளார். அமைச்சுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அறைகளை தமது உறவினர்களுக்கு வழங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1000 இலட்சம் ரூபா வரை இவரது இந்த செயற்பாடுகளால் அரசாங்கத்துக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY