காலிமுகத்திடலில் கடத்தப்பட்ட குழந்தை சிலாபத்தில் மீட்பு

0
95

Baby legsகாலிமுகத்திடலில் இருந்து 10 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கிருளப்பனையைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரே பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலிமுகத்திடலில் கடந்த 2 ஆம் திகதி தாய், தந்தையுடன் இருந்த குழந்தை காணாமல் போனது. இது தொடர்பில் கோட்டை பொலிஸாரிடம் குழந்தையின் தாய் முறைப்பாடு செய்தார்.

இதன்படி, கோட்டை பொலிஸ் அதிகாரிகள் குழு இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்தநிலையில், சிலாபம் பகுதியில் சந்தேகநபர் கடத்தப்பட்ட குழந்தையுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நேற்று இரவு அங்கு சென்ற பொலிஸார் குழந்தையை மீட்டு, சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY