இலங்கை யாத்திரிகர்களின் நேர விரயத்தை தவிர்க்க ஹஜ் குழு விசேட நடவடிக்கை

0
162

hajj28இலங்­கை­யி­லி­ருந்து பய­ண­மாகும் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவின் ஜித்தா விமான நிலை­யத்தில் தமது குடி­வ­ரவு, குடி­ய­கல்வு கட­மை­களை நிறை­வேற்றிக் கொள்­வதில் ஏற்­படும் நேர விர­யங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு இலங்­கையின் ஹஜ்­குழு புதிய நடை­மு­றை­யொன்­றினைக் கையா­ள­வுள்­ளது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்லும் யாத்­தி­ரி­கர்­களும், ஏனை­யோரும் விமான நிலை­யத்தில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு பிரிவில் தமது கைரே­கை­யினைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்­வாறு பதிவு செய்து கொண்­டதன் பின்பே விமான நிலை­யத்­தி­லி­ருந்தும் வெளி­யேற அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள்.

ஹஜ்­யாத்­தி­ரையின் போது தினம் ஆயி­ரக்­க­ணக்­கான யாத்­தி­ரி­கர்கள் சவூதி நோக்கி பய­ணிப்­பதால் ஜித்தா விமான நிலை­யத்தில் நெரிசல் நிலை­யினால் கைரேகை பதி­விற்கு பய­ணிகள் பல மணித்­தி­யா­ல­யங்கள் காத்து நிற்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இந்­நி­லை­யினைத் தவிர்ப்­ப­தற்­காக இலங்­கை­யி­லி­ருந்து பய­ணிக்கும் ஹஜ்­யாத்­தி­ரி­கர்­களின் கைரேகை அடை­யா­ளங்­களை அதற்­கான இயந்­திரம் மூலம் பதிவு செய்து உரி­ய­வரின் புகைப்­ப­டத்­துடன் சமர்ப்­பிப்­ப­தற்கு ஹஜ்­குழு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. இது தொடர்­பாக ஜித்­தா­வி­லுள்ள இலங்­கைக்­கான கொன்­சி­யூலர் ஜெனரல் பைசல் மக்கீன் சவூதி குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் உய­ர­தி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி மொகமட் தாஹா சியாத் கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையில் இருந்து முத­லா­வது தொகுதி ஹஜ் பய­ணி­களை ஏற்றிக் கொண்டு விமானம் எதிர்­வரும் 14 ஆம் திகதி புறப்­ப­ட­வுள்­ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையும், சவூதி அரே­பியா எயர்லைன்ஸ் விமான சேவையும் ஹஜ் பய­ணி­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

சவூதி அரே­பி­யாவில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக 4 டாக்­டர்கள் சேவையில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ளனர்.

இலங்கை பய­ணி­களின் பாது­காப்பு மற்றும் ஏனைய நலன்களைக் கவனிப்பதற்கான முன்னேற்பாடுகளை ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பைசல் மக்கீன் மேற்கொண்டு வருகிறார் என ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தெரிவித்தார்.

LEAVE A REPLY