(Video) உடமைகளை விட்டுவிடுங்கள்; வெளியே குதியுங்கள்: துபாய் விமானத்தின் ‘திக் திக்’ நிமிடங்கள்

0
111

201608031758306973_Dubai-airport-shut-down-after-Emirates-accident_SECVPFஇந்தியாவிலிருந்து சென்ற, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் துபையில் விபத்தில் சிக்கியது. எனினும் பயணிகள் உயிர் தப்பினர்.

துபை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் தீப்பற்றினாலும், அதிலிருந்த 226 இந்தியர்கள் உள்பட 282 பயணிகளும், 18 விமானப் பணியாளர்களும் உயிர் தப்பினர்.

பயணிகளை விமானத்தில் இருந்து இறங்குமாறு கூறப்பட்டது முதல், விமானம் எரியும் வரையிலான விடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், உடைமைகளை எல்லாம் விட்டுவிடுங்கள்… உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே குதியுங்கள் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுவது முதல், விமானத்தின் எஞ்ஜினில் தீப்பிடிப்பது வரை பதிவாகியுள்ளது.

இதுகுறித்து, எமிரேட்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

திருவனந்தபுரத்திலிருந்து 300 பேருடன் துபை வந்து கொண்டிருந்த ஈ.கே.521 விமானம், துபை சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.15 மணிக்கு (இந்திய நேரம்) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை என்றார் அவர்.

LEAVE A REPLY