எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது தெரியுமா?

0
148

201608041212079894_Do-you-know-how-often-you-should-not-exercise_SECVPFஉடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை அளிக்கும் என்பது யாவரும் அறிந்ததே. சில நேரங்களில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பார்ட்டி அல்லது பங்ஷன் என சென்று மது அருந்து இரவில் தூங்க சென்றிருந்தீர்கள் என்றால் மறுநாள் காலையில் ஜிம் செல்வதை தவிர்த்துவிடுங்கள். ஆல்கஹால் உடலில் நீரை குறைத்துவிடும். இதனால் அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். போதை தெளிந்துவிட்டால் மட்டும் போதாது. வழக்கம்போல பிரஷ் ஆக உணரும் வரை உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

சிலசமயம் மனதுக்கு ஜிம் போவதற்கோ அல்லது உடற்பயிற்சி செய்வதற்கோ பிடிக்காது. மனம் கணமாக இருக்கும். வேறு ஏதாவது பிரச்சனைகளால் அழுதத்ததுடன் இருக்கும். அந்த சமயங்களில் ஜிம் முக்கு லீவு போடுங்கள். கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள். மனம் லயிக்காமல் செய்யும்போது உங்கள் உடலுக்கு நீங்கள் அளிக்கும் தண்டனை போல ஆகிவிடும் உடற்பயிற்சி.

சளி, ஜூரம், என ஏதாவது சிறு உடல் பாதிப்பு வந்திருந்தாலும் கூட உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து உடல் பாதிக்கப்பட்டிருக்கும்போது உங்களது எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அப்போது உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடல் மேலும் வலுகுறையும். இதனால் வேறு பக்க விளைவுகள் ஏற்படும். உடலின் சக்தி அளவு குறைந்து, உங்களது கவனம் குறையும் என்பதால் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.

சிலர் இன்டர்நெட், டிவி, நைட் ஷோ என்று சென்றுவிட்டு இரவு தூக்கம் சரியாக கொடுக்காமல் அதிகாலையில் ஜிம் செல்வார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சரியான அளவில் தூக்கமும் அவசியம். நாளடைவில் தூக்கம் குறைபாட்டுடன் உடற்பயிற்சி செய்வதால் உடல் அசதி, மயக்கம், தலைகிறுகிறுப்பு போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உடலில் சின்ன காயம் ஏற்பட்டிருந்தாலும் கூட, கடுமையான உடற்பயிற்சி செய்வதை அந்த காயம் ஆறும் வரை தவிர்த்துவிடுங்கள். காயப்பட்ட உடலுடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் மேலும் அந்த காயத்தின் தீவிரம் அதிகமாகலாம்.

LEAVE A REPLY