காட்டு யானை தாக்கி மட்டக்களப்பு மீனவக் குடும்பஸ்தர் பலி

0
101

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Elephant Attckமட்டக்களப்பு வன இலாகாப் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மீனவரான குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை (ஓகஸ்ட் 03, 2016) இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் சித்தாண்டி 1, பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த குமாரன் யோகநாதன் (வயது 48) என்பவரே மரணித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வழமைபோன்று புதன்கிழமை மாலையும் இவர் சந்தனமடு ஆற்றுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு நிசப்தமாக நீர் அருந்தவந்த காட்டு யானை மீனவரைத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது.

மீன்பிடிக்கச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேட ஆரம்பித்தபொழுதுதான் அவரை காட்டு யானை துவம்சம் செய்துள்ளது பற்றி தெரியவந்துள்ளது. சடலம் ஏறாவூர் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைக்குத் தலைமை தாங்கிய பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY