துபாய் விமான விபத்து; 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது மரணம்!

0
92

201608040922402658_Firefighter-dies-after-tackling-plane-fire-at-Dubai-airport_SECVPFதிருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது என்பவர் மரணம் அடைந்தார்.

புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர் தப்பினார்கள். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தது நிம்மதியை அளித்தது. ஆனால் எமிரேட்ஸ் விமானம் தீ பிடித்து எரிந்தபோது பயணிகளை மீட்க போராடிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது மரணம் அடைந்தார்.

பயணிகளை மீட்கும் போது படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற தீயணைப்பு வீரர்களும் காயம் அடைந்து உள்ளனர், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமதுக்கு துபாய் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

LEAVE A REPLY