சூப்பரான சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா

0
22

201608040914155502_how-to-make-Chicken-stuffed-Paratha_SECVPFதேவையான பொருட்கள் :

எலுமில்லாத சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் + தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கு
கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கு
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்

செய்முறை :

* மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி வைக்கவும்.

* சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.

* இதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு தூள் வாசம் போக வதக்கவும்.

* தூள் வாசம் போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து மசாலா நன்றாக சேர்ந்த உடன் வதக்கி இறக்கவும்.

* பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும். பின்னர் அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா தயார்.

LEAVE A REPLY