ஹாங்காங்கை புயல் தாக்கியது : விமான போக்குவரத்து பாதிப்பு

0
89

Tamil_News_large_1577282_318_219ஹாங்காங்கை தாக்கிய புயலால், அங்கு, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. கிழக்காசிய நாடான சீனாவின், தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக ஹாங்காங் விளங்கி வருகிறது.

இந்நிலையில், வடக்கு பசிபிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த, ‘நீடா’ புயல், பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய பின், சீனாவின் ஹாங்காங் நோக்கி நகர்ந்தது. இந்நிலையில், ஹாங்காங்கை, மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில், நேற்று புயல் தாக்கியது. இதனால், பலத்த மழை கொட்டியது; வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதனால், பிரதான சாலைகள் மற்றும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து, வெளிநாடுகளுக்கும் செல்லும், 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 300 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பல மணிநேரம் தாமதமானது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சாப்பாடு இன்றியும், தங்குவதற்கு இடம் இன்றியும் அவதிப்பட்டனர். விமானம் எப்போது புறப்படும்; எப்போது வரும் என்பது தெரியாமல் அவர்கள் தவித்தனர். ஹாங்காங் பங்குச்சந்தையும் மூடப்பட்டது.

LEAVE A REPLY