லிபியாவில் தற்கொலை கார் குண்டு தாக்குதல்: 22 பேர் பலி – 20 பேர் படுகாயம்

0
138

Libyas Benghaziலிபியாவின் இரண்டாவது பெரிய நகரான பெங்காஸியில், செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில், 3 கட்டடங்கள் முற்றிலும் சிதைந்தன. ஏராளமானோர் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா.வால் அங்கீரிக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்தி வரும் படையினரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் குவார்ஷா மாவட்டத்தில் மேற்கு பெங்காசியில் ஒருகுடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உள்ளூர் ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.

உள்ளூர் ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பு சமீபகாலமாக பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. என்னிம் நகரம் முழுவது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY