கனமழையால் வெள்ளம்: 14 மாவட்டங்களில் 8 லட்சம் பேர் பாதிப்பு

0
110
201608032016307220_8-lakh-people-affected-in-floods-across-14-districts-of_SECVPFஇந்தியாவில்  அசாமில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 14 மாவட்டங்களில் உள்ள 638 கிராமங்கள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக அசாம் அரசு 118 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. இந்த நிவாரண முகாம்கள் மூலமாக உணவு, உடைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மாநிலத்தின் பெரிய நதியான பிரம்மப்புத்திராவில் அபாய கட்டத்தை  தாண்டி வெள்ள நீர் ஓடுகிறது. தற்போது வரை மாநிலம் முழுவதும் மழை சம்பவம் தொடர்பாக 34 பேர் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY