மைக்ரோசொப்ட் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பணியளார்கள்!

0
99

microsoft_banner1200x536கணணி உலகின் ஜாம்பவானாக இன்றும் வலம் வரும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உலகமெங்கும் பல ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.

இந் நிலையில் சுமார் 2850 பணியாளர்களை இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தனது நிறுவனத்தினை மீள் கட்டமைப்புக்கு உட்படுத்தும் நோக்கிலேயே இந்த அதிரடி செயற்பாட்டில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே வருடத்தில் இரண்டாவது தடவை பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் அந் நிறுவனம் இறங்கியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மே மாத்தில் 1850 பணியாளர்களை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வருடம் தனது கைப்பேசி உற்பத்தி பகுதியில் உலகெங்கிலும் பணி புரிந்த 7,000 பணியாளர்களை இடைநிறுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் சுமார் 1 பில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பயன்படுத்த வைத்து தனது புதிய இலக்கை அடையும் நோக்கிலும் எதிர்வரும் வருடங்களில் செயற்பட மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY