இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுத்தர வேண்டும்: பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
147

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

7a812cb0-0a86-4463-b40a-558b14e3212eஇம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுத் தமது பிரதேசத்திற்கும் தமது நாட்டிற்கும் நற்பெயரைப் பெற்றுத்தர வேண்டும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.

இந்தமுறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று பெற்றோருக்கும் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நற்பெயரைப் பெற்றுக் கொடுக்கவும் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தவும் முயற்சிக்க வேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்தர பரீட்சைக்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றும் மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டம் உயர்தர பரீட்சை முடிவில் முதன்மை மாவட்டமாக திகழ்வதற்கு ஒவ்வெருவரும் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் சகலரும் நல்ல பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளப் பிரார்த்திக்கிறேன் என்றும்n தரிவித்துள்ளார்.

LEAVE A REPLY