முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இன அழிப்பினை விசாரிக்க விஷேட நீதிமன்றமொன்றினை அமைக்குமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் தேசிய சுஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள்

0
12

b81da0d3-7584-4dc3-a944-823f1ded49da(விசேட நிருபர்)

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இன அழிப்பினை விசாரிக்க விஷேட நீதிமன்றமொன்றினை அமைக்குமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் தேசிய சுஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள் விட்டுள்ளது.

26வது தேசிய சுஹதாக்கள் தினத்தையொட்டி (3.8.2016) புதன்கிழமை தேசிய சுஹதாக்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 1990ம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும்.

1990ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கு மாகாணாத்திலுள்ள பள்ளிவாயல்களிலும் முஸ்லிம் கிராமங்களிலும் ஜனாசாக்கள் (சடலங்கள்) மலைபோல் குவிந்து கிடந்தன.

இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் 3ம் திகதியை இலங்கை முஸ்லிம்கள் சுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து வருகின்றனர்.

1915ம் ஆண்டு ஆரம்பமாகிய இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாதம் பயங்கரவாதம் இன்று வரை தீர்வில்லாமலேயே அழுத்கம வரை தொடர்கின்றது.

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைச் சம்பவங்களும் வடக்கிலிருந்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட துயரச்சம்பவங்கள் முஸ்லிம்கள் வரலாற்றில் தொடர்ச்சியான மைல்கற்களாகும்.

1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப்பதிவுகளுக்குரிய பேரவலமாகும்.

பொத்துவில் தொடக்கம் அக்கரைப்பற்று ஒலுவில், சாய்ந்தமருது, காததான்குடி ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என பல முஸ்லிம் பிரதேசங்கள் மீது மிகப் பெரியளவிலான பயங்கரவாதத்தை புலிகள் ஏவி முஸ்லிம்களை வெளியேற்ற முயன்றனர்.

12.7.1990 அன்று புனித மக்கா ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு கொழும்பிலிருந்து கல்மனை வழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லம்களை குருக்கல் மடம் பகுதியில் வைத்து தமீழ விடுதலைப்புலிகள் வெட்டியும், சுட்டும் கடத்தியும் கொலை செய்தனர்.

அவர்களின் சடலங்களைக் கூட (ஜனாசாக்கள்); இன்று வரை காட்டவில்லை.

3.8.1990 அன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் மற்றும் ஹ{ஸைனிய்யாப்பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களிலும் இரவு புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிரந்த போது விடுதலைப்புலிகளினால் 104 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஏறாவூர் ஐயங்கேணி, மற்றும் சதாம் ஹ{ஸைன் கிராமங்களில் உறக்கத்திலிருந்த அப்பாவி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய்மார்கள் என 116 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இத்தனை நிகழ்வகளும் மூடி மறைக்கப்பட்ட இன்னும் பல துயர வரலாறுகளும், மன்னிக்கப்பட்டாலும் மறக்க முடியாத நினைவுகளாகும்.

விலை மதிக்க முடியாத இத்தனை உயிர்கள் உடமைகளை இழந்து வடக்கையும் கிழக்கையும் பிரித்து நமது சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்த்ல் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு முட்டுக் கொடுக்கும் சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த முடிவிலிருந்து பின் வாங்கி எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணையாமல் பாதுகாத்துக் கொள்வதுடன் முஸ்லிம் சமூகம் தனித்துவ அரசியலை நடாத்துவதற்கு ஒரு அணியாக திரளவேண்டும். என ஷுஹதாக்கள் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழ் சமூகத்திற்கெதிரான இனச் சுத்திகரிப்பை விசாரிப்பதற்கு நியமிக்கவிருக்கும் விஷேட நீதிமன்றங்களில் ஒரு நீதிமன்றத்தினை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இன அழிப்பினை விசாரிக்க அமைத்து தருமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY