வெள்ளத்தில் பாலம் இடிந்து, 20 பேரைக் காணவில்லை

0
107

160803024615_mahar_2957416hஇந்தியாவின் மேற்கு மாநிலமான மஹாராஷ்டிராவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் கீழே வெள்ளப்பெருக்கெடுத்தோடும் ஆற்றில் விழுந்துவிட்டன.

20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது. கோவாவிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த குறைந்தது இரண்டு பஸ்கள் மற்றும் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று ஆரம்ப கட்ட செய்திகள் கூறின.

வெள்ளத்தால் ஏற்பட்ட அதிக அழுத்தமே இந்தப் பாலம் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணமாகத் தோன்றுகிறது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபத்நாவிஸ் கூறினார்.

அப்பகுதியில் நிலவிய இருள் காரணமாக மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

LEAVE A REPLY