சுற்றுலாப்பயணிகளை திகிலூட்டும் 4600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை

0
90

201608031544214919_Chinas-terrifying-cliffside-glass-skywalk-opens-with-4600_SECVPFசீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது அங்குள்ள சுற்றுலாத்துறை.

ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள தினமென் மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை சீனா அரசு அமைத்துள்ளது.

இந்த மலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுற்றுலாப்பயணிகள் கண்ணாடி நடைபாதை வழியாக நடந்து வரலாம். இந்த கண்ணாடி நடைபாதை தரையில் இருந்து 1402 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

துணிச்சல் மிக்க சுற்றுலாப்பயணிகள் இந்த கண்ணாடி நடைபாதையில் வலம் வருவது மட்டுமின்றி மலை மீதிருந்து சுற்றுவட்டார அழகை கண்டு களிக்கலாம். கடல் மட்டத்திற்கு மேல் இருந்து பார்க்கையில் இயற்கை அதிர்ச்சியூட்டுவதாகவும் மிகவும் திகிலூட்டுவதகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

திங்கள்கிழமை முதற்கொண்டு இந்த கண்ணாடி நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். பார்வையாளர்கள் இங்கிருந்தும் இனி செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கண்ணாடியிலான உலகின் மிகப்பெரிய பாலம் ஒன்றை சீனாவின ஜியாங்கியஜி கிராண்ட் ஹூனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது தரையில் இருந்து 980 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள இன்னொரு கண்ணாடி பாலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விரிசல் விழுந்துள்ளதை சுற்றுலாப்பயணி ஒருவர் நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து அதில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY