சிறுநீர் சிவப்பு நிறத்தில் போனமையால் அதிர்ச்சி; 16 மாணவிகள் வைத்தியசாலையில்: பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் சம்பவம்

0
215

Ffsfsdf650ஓட்டமாவடி வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவிகள் வயிற்றுவலி மற்றும் சிறுநீர் சிவப்பு நிறத்தில் போவது தொடர்பில் இன்று பிற்கபல் ஒரு மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவிகள் தங்களுக்கு சிவப்பு நிறத்தில் சிறுநீர் போவதுடன் வயிற்று வலியாகவும் உள்ளது என்று வகுப்பாசிரியையிடம் தெரிவித்ததையடுத்து மாணவிகள் பதினாறு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு வயிற்று வலியுடன் சிறுநீர் சிவப்பு நிறத்தில் போவது தொடர்பாக மாணவிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைகள் கிடைத்த பின்பே இந் நொய் எதனால் ஏற்பட்டது என்று தெரிவிக்க முடியும் என்று வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

#Virakesari

LEAVE A REPLY