(Photos) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு மீட்பு

0
42

(விஷேட நிருபர்)

DSCN8097காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு ஒன்று இன்று (03) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பெலிசார் தெரிவித்தனர்.

தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் கிரான்குளம் பிரதான வீதியில் நீர் வழங்கள் வேலைகளுக்காக குழி தோண்டிக் கொண்டிரந்த போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

அங்கு வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் குண்டு ஒன்று கிடப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பில் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தினர்.

DSCN8096மீட்கப்பட்ட குறித்த குண்டு 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY