தாஜூடீன் கொல்லப்பட்ட அன்று சந்தேகநபருக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்த அழைப்புக்கள்

0
102

Waseem Thajudeen Telephoneமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று கோட்டை மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தாஜூடின் கொலை செய்யப்பட்ட வேளை, நாரஹேன்பிட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வந்த அழைப்புக்கள் பரிசோதிக்கப்பட்டதாக, அரச தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இவற்றில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சில அழைப்புக்கள் வந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY