மயானத்திலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

0
147

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Dead-body-in-morgue-006மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனை மயானத்திலிருந்து காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான வீதி சந்திவெளியைச் சேர்ந்த சின்னையா குணரெட்ணம் (வயது 54) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து காணாமல்போன நிலையில் இன்று (03) புதன்கிழமை பகல் அவர் சந்திவெளிக்கு அருகிலுள்ள முறக்கொட்டான்சேனை கிராம மயானத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா தற்கொலையா என்பது பற்றி தாம் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY