நான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்; எனக்குரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை; சுசந்திகா ஜயசிங்க

0
212

18363847345-01-02இலங்கை அரசு தன்னைப் புறக்­க­ணித்­துள்­ள­தாக தான் கரு­து­வ­தாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்­கையின் புகழ்­பெற்ற ஓட்ட வீராங்­க­னை­யான சுசந்­திகா ஜய­சிங்க கூறி­யுள்ளார். 2000 ஆம் ஆண்டு சிட்­னியில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களின் 200 மீற்றர் ஓட்­டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்­றவர் சுசந்­திகா ஜய­சிங்க.

சிட்னி ஒலிம்பிக் முடி­வ­டைந்து 16 வரு­டங்­க­ளான நிலையில், இலங்கை அர­சினால் தனக்கு வழங்­கப்­பட வேண்­டிய அங்­கீ­காரம் ஒரு­போதும் கிடைக்­க­வில்லை எனவும் ஏ.எவ்.பி. செய்திச் சேவை­யிடம் அவர் தெரி­வித்­துள்ளார்.

சிட்னி ஒலிம்பிக் போட்­டியின் 200 மீற்றர் ஓட்­டத்தில் சுசந்­தி­கா­வுக்கு முதலில் வெண்­கலப் பதக்­கமே கிடைத்­தது.

எனினும் அப்­போட்­டியில் தங்கப் பதக்கம் வென்ற அமெ­ரிக்க வீராங்­கனை மேரியன் ஜோன்ஸ் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­யதை ஒப்­புக் ­கொண்­டதால் அவரின் தங்­கப்­ப­தக்கம் பறிக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து 2007 ஆம் ஆண்டு சுசந்­தி­கா­வுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது 40 வய­தான சுசந்­திகா தனது கண­வ­ரிட­மி­ருந்து பிரிந்து வாழ்­வ­தாக அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.

LEAVE A REPLY