சிரியாவில் வி‌ஷவாயு வீச்சு: 33 பேர் பாதிப்பு – அதிபர் ஆசாத் மீது புகார்

0
117

201608031049174779_Rescue-group-says-toxic-gas-dropped-on-Syrian-town_SECVPFசிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து ராணுவத்துக்கு ரஷியா உதவி வருகிறது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிட்லிப் மாகாணத்தில் சாராகைப் பகுதியில் நள்ளிரவில் குளோரின் வாயு (வி‌ஷவாயு) கண்டெய்னர்கள் வீசப்பட்டன.

இதனால் அதில் இருந்து வெளியான வி‌ஷவாயு தாக்கி 33 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இத்தகவலை சிரியா மீட்பு சேவை மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

வி‌ஷவாயு வீச்சியதால் பாதிக்கப்பட்டோர் முச்சுவிட சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு முகத்தில் முகமூடி வழியாக ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. அந்த வீடியோ ‘யூடியூப்’ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வி‌ஷவாயு கண்டெய்னர்களை ரஷியா ராணுவ ஹெலிகாப்டர் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வி‌ஷகுண்டுகள் வீசப்பட்டதாக. அதிபர் ப‌ஷர்கல் ஆசாத் மீது புகார் கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY