முதுகுவலி வராமலே தடுக்க முடியுமா? முடியும்! எப்படி?

0
125

201608030810050990_prevent-back-pain-can-happen_SECVPFபொதுவாக எல்லா மனிதரும் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் முதுகு வலியால் அவதிப்படுகிறார். அதுவும் நமது ஊர் ரோடுகளில் பயணிக்கும்போது கட்டாயம் முதுகுவலி வந்துவிடும்.

முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள். அதிகபட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு. தசை, தசை நாண்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். முதுகு வலி அனைவரையும், குறிப்பாக 45லிருந்த 65 வயதுகளில் உள்ளவரை தாக்கும். 70% மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள்.

* உயரத்துக்கு ஏற்ப உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

* காய்கறி, பால், பழம், சிறுதானியங்கள், நார்ச்சத்து, புரதசத்து, கால்சிய சத்து சேர்ந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுங்கள்.

* உடல் மீது தனிக்கவனம் எப்போதும் செலுத்துங்கள். நமது உடல் பொம்மை அல்ல, கண்டபடி இயங்க! இஷ்டத்திற்கு வளைக்காமல், நிதானமாக, கவனமாக இயங்குங்கள்.

* தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்வதை நடைமுறைப்படுத்துங்கள்.

* இருசக்கர வாகனம் ஓட்டும்போது குண்டு குழிகள் இல்லாத சாலையில் செல்லுங்கள்.

* சரியான முறையில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து, தினமும் அளவான தூரம் மட்டுமே ஓட்டுங்கள். உங்கள் வாகனமும் அதிர்வுகளை தாங்கும் விதத்தில் தரமானதாக இருக்கட்டும்.

* பொருட்களை நிதானமாக தூக்கி, அவசரமில்லாமல் வீட்டு வேலைகளை பாருங்கள்.

* கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நெடுநேரம் அமர்ந்து வேலைபார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

* நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலைபார்க்கும் பெண்கள், 8 அங்குல உயரத்தில் ஒரு பலகையைவைத்துக்கொண்டு அதில் ஒரு காலை தூக்கிவைத்திருங்கள். இப்படி ஒரு காலை தூக்கிவைத்துக்கொண்டு நின்றபடி வேலை பார்த்தால் முதுகுத்தண்டுக்கு கொடுக்கும் அழுத்தம் குறையும்.

LEAVE A REPLY