வாழைச்சேனை பகுதியில் பெருமதியான பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

0
89

(வாழைச்சேனை நிருபர்)

6abce93f-e33f-45d5-85ee-00cb919347cfவாழைச்சேனை பகுதியில் பெருமதியான பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (02.08.2016) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஹைராத் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருட்களை பத்தொன்பது வயது இளைஞன் வைத்துள்ளார் என்று அவரது குடும்ப உறவினர் ஒருவரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தை பரிசோதனை செய்த பொலிஸார் குறித்த இளைஞரையும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளதுடன்; அவர்களிடம் இருந்து பெருமதியான பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

23a8b535-3774-4421-9325-342bd92888d2சந்தேக நபர் கல்குடா, ஏறாவூர், கல்முனை போன்ற பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரிடம் இருந்து எல்.சீடி. தொலைக்காட்சி பெட்டி – 01, கிருமிநாசினி தெளிக்கும் கருவி – 01, கணனி – 01, துவிச்சக்கரவண்டி – 01, நீர் இறைக்கும் இயந்திரம் – 02, இரும்பு வெட்டும் இயந்திரம் – 01, கையடக்க தொலைபேசி – 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இன்னும் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY