வெனிசூலா அதிபருக்கு நெருக்கடி: பதவி பறிப்பு நடவடிக்கைக்கு தேர்தல் சபை அங்கீகாரம்

0
114

201608030622115460_Nicolas-Maduro-dismissal-threat-grows-as-enough-Venezuelans_SECVPFவெனிசூலா நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ இருந்து வருகிறார். அங்கு கடும் அரசியல், பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை. அங்கு பணவீக்கம், உலகிலேயே உச்ச நிலையில் உள்ளது. இந்த நிலையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. அவரை பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

நிக்கோலஸ் மதுரோவை பதவி நீக்கம் செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக நாட்டின் 24 மாநிலங்களிலும் ஒரு சதவீத வாக்காளர்களின் கையெழுத்துக்களை எதிர்க்கட்சிகள் பெற்று விட்டன. இதை அந்த நாட்டின் தேசிய தேர்தல் சபை அங்கீகரித்து விட்டது. இதனால் நிக்கோலஸ் மதுரோவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 3 புதிய பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY