சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பீரங்கி தாக்குதல்: 28 பேர் பலி

0
96

201608022038354176_Tanker-attack-kills-28-in-Syria_SECVPFசிரியாவில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அங்கு இன்னும் முழுமையாக சண்டை ஓயவில்லை.

மிகப்பெரிய நகரான அலெப்போவில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டு கிளர்ச்சியாளர்களும் அரசுப்படையினரும் கடுமையாக மோதி வருகின்றனர். அங்கு தினந்தோறும் நடத்தப்படும் குண்டுவெடிப்புகள், வான்தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிக அளவில் கொல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் அலெப்போ நகரில் அரசுப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 24 மணி நேரத்தில் 6 சிறுவர்கள், 8 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

LEAVE A REPLY