முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ் நீக்கம்

0
163

201608022144466349_AB-De-Villiers-ruled-out-of-South-Africa-squad-for-New_SECVPFதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் டெஸ்ட் போட்டியில் அந்த அணிக்காக கடந்த 2004-ல் இருந்து விளையாடி வருகிறார். ஆனால், காயம் காரணமாக இதுவரை அணியில் இருந்து விலகியது கிடையாது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிராக இந்த மாதம் 19-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா தன் சொந்த நாட்டில் விளையாடுகிறது.

இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக டி வில்லியர்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு 6 வாரம் முதல் 8 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நியூசிலாந்து அணிக்கெதிராக அறிவிக்கப்பட்டுள்ள தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இருந்து டி வில்லியர்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. கைல் அபோட், 3. ஹசிம் அம்லா, 4. டெம்பா பவுமா, 5. ஸ்டீபன் குக், 6. குயிண்டான் டி காக், 7. டுமினி, 8. டீயான் எல்கர், 9. கிறிஸ் மோரிஸ், 10. வெயின் பர்னெல், 11. வெர்னான் பிளாண்டர், 12. டேன் பியட், 13. ரபாடா, 14. ஸ்டெயின், 15. ஸ்டீயான் வான் சைல்.

‘‘நான் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இடம்பெறாமல் போனது உண்மையிலேயே பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. ஏனென்றால் நான் அறிமுகம் ஆன 2004-ல் இருந்து காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்ததில்லை’’ என்று டி வில்லியர்ஸ் கூறினார்.

LEAVE A REPLY