சுஹதாக்களை மறந்தது இலங்கை முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல காத்தான்குடி சமூகமும்.

0
158

(ஜுனைட்.எம்.பஹ்த்)

b81da0d3-7584-4dc3-a944-823f1ded49da1990.08.03 ம் திகதி இதே காத்தான்குடியில் பாசிச புலிகளின் கொலை வெறித்தனமான நடவடிக்கையினால் அல்லாஹ்வின் இறை இல்லத்தில் இறைவனை சுஜூது செய்த நிலையில் மிருகத்தனமாக சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த துயரம் நடந்து இன்றுடன் 26 வருடங்கள் ஆகும் நிலையில் இச் சம்பவத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தை தவிர வேறு எந்த இலங்கை முஸ்லிமும் நினைவில் கொண்டுள்ளதாக தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் 03 ம் திகதி வந்தால் காத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி வீதிகள் மற்றும் வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு வீதிகளில் குளிர்பானங்கள் நார்சாக்கல் வழங்கப்படுவதுடன் தாக்குதல் நடந்த பள்ளிவாயலில் விஷேட ஞாபகார்த்த நிகழ்வுகள் நடைபெறும்.. இதனை பார்த்ததும் சிறுவர்கள் நடந்த சம்பவத்தை அறிய ஆர்வம் எடுப்பார்கள்… முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் துக்கத்தில் ஆழ்ந்து இருக்கும்.

ஆனால் நடந்த சம்பவத்தை இன்று மறந்து நமது சமூகம் அந்த நாளில் வழமை போன்று தனது வியாபாரத்திலும் அன்றாட நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. ஷஹிதாக்கப்பட்டவர்களின் குடும்பம் மாத்திரம் அவர்களை நினைவு கூர்ந்து வருகிறது என்பது மன வேதனையாக இருக்கிறது.

நமது ஊரில் நம் சகோதரர்களுக்கு நடந்த இந்த கொடுரமான சம்பவத்தை நாமே கவனத்தில் கொள்ளாது இருக்கும் போது இந்த நாடு எப்படி கவனத்திற்கொள்ளும். இந்த நிலைமை இவ்வாறு சென்றால் எதிர்கால முஸ்லிம் சந்ததிகளுக்கு வரலாறு மறக்கடிக்கப்பட்டுவிடும் என கவலையாக உள்ளது.

எது நடந்தாலும் நம் சமூகம் எதிர்கொண்ட துயரமும் நமது வரலாறும் மறக்கடிக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

LEAVE A REPLY