காத்தான்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்!

0
208

(S.சஜீத்)

bloodbag 0001காத்தான்குடியில் 26வது சுஹதாக்கள் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் (IYF) சமூக சேவைப் பிரிவினரால் மாபெரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை (03) காலை 08.30 மணி தொடக்கம் பி.ப 01.30 மணிவரை காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள (IYF) கல்விமையத்தின் காரியாலயத்தில் (ஹுசைனியா கிட்ஸ் கொலஜ் சிறுவர் பாடசாலையில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் ஒரு துளி இரத்தத்தால் பல உயிர்களை வாழ வைக்க இந்த மகத்தான பணிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றன.

ஏற்பாட்டுக் குழு: (IYF)

அல்லாஹ் அவனுடைய திருமறையில் கூறுவதாவது, ‘எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்குர்ஆன் 5:32)

Untitled-1

மேலும் இரத்ததானம் பற்றி சில தகவல்கள்

01. நமது உடலில் 5 லீற்றர் முதல் 6 லீற்றர் வரை இரத்தம் ஓடுகிறது.

02. இரத்ததானம் செய்யும் போது ஒரு யூனிட் இரத்தமே எடுக்கப்படுகின்றது. (ஓருயூனிட் என்பது 350 மி.லி. ஆகும்)

03. இரத்ததானம் செய்வதற்கு முன் நமது உடலை கைதேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.

04. இரத்ததானம் செய்வதற்கு அதிகபட்சம் 15 நிமிடங்களே செலவாகும்.

05. இரத்ததானம் செய்த உடனேயே அல்லது சில நிமிடங்களிலேயே வழக்கமான பணிகளை செய்ய ஆரம்பித்துவிடலாம்.

06. தானம் செய்த இரத்தம் சுமார் 48 மணி நேரத்திற்குள்ளேயே புது இரத்தமாக உற்பத்தி ஆகிவிடும்.

07. நாம் வழங்கும் இரத்தம் உயிர்காக்க மட்டுமே உதவுகின்றது.

LEAVE A REPLY