முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்த அறிக்கை

0
144

hakeeeeem2முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் மற்றும் சேர்க்­கப்­பட வேண்­டி­ய­வைகள் தொடர்­பாக ஆராய்ந்து சிபார்சு செய்­வ­தற்கு கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் நிய­மிக்­கப்­பட்ட குழு தனது சிபார்­சுகள் அடங்­கிய அறிக்­கையை இம்­மாத இறு­தியில் நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ, முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் ஆகி­யோ­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ளது.
குறிப்­பிட்ட குழுவின் தலை­வ­ராக ஓய்வு பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் கட­மை­யாற்­று­கிறார்.

குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக நீதி­ப­திகள்,சட்­டத்­த­ர­ணிகள், உல­மாக்கள் மற்றும் பெண் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் பற்றி பல கலந்­து­ரை­யா­டல்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.

பொது மக்கள் மற்றும் சமூக இயக்­கங்கள் என்­ப­ன­வற்­றி­ட­மி­ருந்து ஆலோ­ச­னைகள் பெறப்­பட்டு இந்தத் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இறுதி அறிக்­கைக்கு குழு உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்கள் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தா­கவும், உறுப்­பி­னர்கள் சிலர் ஹஜ் கடமை மேற்­கொள்­ள­வி­ருப்­பதால் இரு வாரங்­க­ளுக்குள் கையொப்­பங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் குழுவின் தலை­வ­ரான ஓய்வு பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார்.

இம்மாத இறுதியில் சிபார்சுகள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

-Vidivelli-

LEAVE A REPLY