குளிர்பான போத்தல்களில் அடங்கியுள்ள சீனியின் அளவிற்கேற்ப மூடிகளுக்கு விசேட நிறங்கள்; இன்று முதல் அமுல்

0
117

sugarகுளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு தொடர்பாக நுகர்வோரை தெளிவுபடுத்தும் நோக்கில் குளிர்பான போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதேச வைத்தியம் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய 1980 ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளிர்பான போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டப்படாமல் இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 100 மில்லிலீட்டரில் 11 கிராம் சீனிக்கு அதிகமாக உள்ள போத்தல்களுக்கு சிவப்பு வர்ண மூடியும். 2 தொடக்கம் 11 கிராமுக்கு உட்பட்ட சீனி அளவை கொண்ட போத்தல்களின் மூடிகள் மஞ்சள் நிறத்திலும், மேலும் 2 கிராமுக்கு குறைவான சீனி அளவை கொண்ட குளிர்பான போத்தல்களுக்கு பச்சை வர்ண மூடிகளும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் இவற்றை இன்றிலிருந்து நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-NF-

LEAVE A REPLY