கைது செய்யப்பட்ட LTTE உறுப்பினர்கள் மீது விஷ ஊசி ஏற்றப்படவில்லை

0
137

Rajithaகைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவ வீரர்கள் எறும்புகளுக்கு கூட தீங்கினை விளைவிக்காதவர்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளது என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது என குறிப்பிட்டார்.

அவ்வாறான செயற்பாடுகளை இராணுவத் தரப்பு எப்போதுமே மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY