காஷ்மீர் நிலவரங்களை கூர்ந்து கண்காணிக்கிறோம்: ஐ.நா. சபை அறிவிப்பு

0
117

kashmir_2956210fகாஷ்மீர் நிலவரத்தை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் நியூயார்க்கில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அதற்கு பர்ஹான் ஹக் கூறியதாவது:

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தற்போதைய காஷ்மீர் நிலவரத்தை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகிறோம், என்றார்.

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த ஐ.நா. சபை தடை விதிக்குமா என்று பாகிஸ்தான் நிருபர் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பர்ஹான் ஹக் பதில் அளிக்கவில்லை.

LEAVE A REPLY