மட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

0
139

(விசேட நிருபர்)

Train_CIமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திரபு பிரதசத்தில் செவ்வாய்க்கிழமை (2.8.2016) அதிகாலை கொழும்பிலிழுந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு ஜெயந்திரபுர பிரதேசத்தில் வைத்து புகையிரத பாதையின் குறுக்கே பாய்ந்து புகையிரத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் வீழ்ந்துள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான இவர் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். இவரது சடலம் புகையிரத்தில் ஏற்றப்பட்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவி;த்தனர்.

உயிரிழந்தவர் புன்னச்சோலை குமாரபுரத்தைச் சேர்ந்த யோகரட்ணம் துஸ்யந்தன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற் கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிசார் மேலும் தெரிவித்தனர்..

LEAVE A REPLY