(Poem) ஆகஸ்ட் -3

0
184

(Mohamed Nizous)

புலிகளின் தாகம்
பொது மக்களின் தேகம்
என்று
பொறுக்கித் தனம்
புரிந்த நாள்.

விடுதலைப் போராட்டம்
தறுதலை போராட்டமாக
தரங் கெட்டுப் போன நாள்.

முள்ளி வாய்க்காலின்
மோசமான சாபத்துக்கு
முகவரி எழுதப்பட்ட நாள்.

கூடப் படிக்கிறவனும்
குழந்தைகளும்
குற்றுயிரானது கண்டு
கொலை வெறியுடன்
குமுறிய நாள்.

அப்பாவிக் குழந்தைகளை
அரை குறை உயிருடன்
அம்புலன்ஸில் ஏற்றும் போது
ஆவி அடங்கிப் போக
ஆக்ரோசமும்
ஆத்திரமுமாக
அலைந்த நாள்.

அடுத்த வேளைக்கு
உணவிருக்குமா என்றல்ல
உயிரிருக்குமா
என்று
பெண்கள்
பித்துப் பிடித்து
பேதலித்து நின்ற நாள்

அந்த
இரவும்
இருட்டும்
இரத்தமும்
இன்னும்
இந்த
இதயத்துள்
இருக்கிறது

LEAVE A REPLY