நல்லாட்சி அரசாங்கத்தின் பொறிமுறைகள் நல்லதாக மாறவில்லை: மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் கமலதாஸ்

0
375

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

467bd025-5b51-474f-ada4-56b814425cf2நல்லாட்சி அரசாங்கத்தின் பொறிமுறைகள் நல்லதாக மாறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.

நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு தொடர்பான வதிவிடச் செயலமர்வில் கலந்து கொண்டு அவர் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 02, 2016) கருத்துரை வழங்கினார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மட்டக்களப்பு, பாசிக்குடா அமாயா உல்லாச விடுதியில் நான்கு நாள் விதிவிட செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.

அங்கு மெதாடர்ந்து கருத்துரை வழங்கிய அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையின் கடந்த ஆட்சியாளர்கள் சட்டத்தையும் பொறுப்புக் கூறலையும் இன்னொருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு தாங்கள் விரும்பிவர்களுக்கு நிவாரணங்களை மக்கள் சார்பாக வழங்கினார்கள்.

யுத்தமும் மக்கள் மீது திணிக்கப்பட்டது இதுவும் மோசமான ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட விடயம். இதனை உலகம் நன்கு அறியும்.

ளவயவந யனெ சரடநச இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சில பிற்போக்குவாத சக்திகளுக்கு தலைவணங்கினார்கள். அவர்கள் ஒரு போதும் சட்டத்திற்குத் தலை வணங்கவில்லை. ஆட்சியாளர்கள் மதவாத இனவாத குறுகிய அரசியல் மனோநிலை கொண்ட குழுக்களுக்கு அடிபணிந்தனரே தவிர இலங்கைச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள நீதிக்கு தலைவணங்கவில்லை.

இலங்கையில் ஏற்பட்ட சிவில் ஆயுத முரண்பாட்டிலே பங்கெடுத்த இனக்குழுக்கள் இருக்கின்றன. அதில் பிராதானமாக தமிழ் இனக்குழுக்களுக்கும் சிங்கள இனக்குழுக்களுக்கும் இடையே இடம்பெற்ற ஆயுத மோதல்களின் விளைவாக மூன்றாந்தரப்பாக நடுநிலையாக இருந்த முஸ்லிம் இனமும் ஆயுத முரண்பாட்டுக்குள் அகப்பட்டு ஒட்டு மொத்த நாடும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்து ஒரு பெரிய அவலத்தில் ஆயுத மோதல் முடிந்தது.

இலங்கை ஆட்சியாளர்களிடையே விரும்பியதை விரும்பிய மாதிரி செய்து கொண்டு செல்லும் கலாச்சாரம் உள்ளதால்தான் நாட்டுக்கு இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ஆயுத முரண்பாட்டுக்குப் பின்னரான காட்சி துவங்கியிருக்கின்றது.

ஒரு நாட்டுக்குள் சகல இன மக்களும் அனைத்து நியாயங்களையும் பெறவேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

சோபித தேரர் போன்ற மாற்றத்தை விரும்பிய நல்லவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிவில் சமூக மன நிலை மாற்றம் வேறு தெரிவுகளின்றிய நிலையில் நல்லாட்சியைத் தோற்றுவித்தது. ஆனால், துரதிருஷ்ட வசமாக நல்லாட்சியில் நாடு எதிர்பார்த்த நல்லது நடக்கவில்லை.

அரச பொறிமுறை தொடர்ந்தும் ஊழல் மிக்கதாகவும், அதிகார ஆணவமும் துஷ்பிரயோகம் செய்யக் கூடியதாகவும் நீதியை மறுக்கின்றதாகவுமே இன்று வரை இருந்து வருவது இன்னொரு மனித அவலத்திற்கு வழிகோலுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஆனாலும், சிவில் சமூகம் முன்னரைப்போன்று இப்பொழுது மனம் தளர்ந்து விடவில்லை என்பது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஒரு பெரும் பக்கபலமாக உள்ளது.

ஆனால், தற்போதைய நல்லாட்சியில் மக்களை நேசிக்காத மக்களோடு ஒன்றிணைந்து வேலை செய்யாத அழுத்தக் குழுக்களின் சில நபர்கள் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைக்குள்ளே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

புதிய செயலணிக் குழுவின் தலைவராக ஜனாதிபதியினால் மனோ தித்தவெல அமர்த்தப்பட்டிருக்கின்றார். இந்தத் தடவை சிவில் சமூகம் கூடுதலான ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்ற ஒரு சக்தியாக மாறியிருக்கின்றது.

சந்தர்ப்பங்கள் நழுவி விட்டது என்ற வார்த்தைப் பிரயோகம் இனி இந்த நாட்டு செயற்பாட்டாளர்களிடத்தில் வரக் கூடாது என்பதே சிவில் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

அரசியல்வாதிகளுக்குச் சார்பாக இருக்கின்றவர்களைப் பற்றி மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை. நியாயமான ஒரு எதிர்கால நாட்டைக் கட்டியெழுப்ப சிவில் சமூகமாகி நாங்கள் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

மறுக்கப்பட்டு வருகின்ற நீதியை போராடிப் பெறுவதற்காக நாங்கள் கரம் கோர்த்திருக்கின்றோம்.

இதற்குத் தடையாக அரசியல்வாதிகளுக்கு எடுபிடிகளாக இருக்கின்ற சுயநலவாதிகளைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. நியாயமான நீதிக்காக வன்முறையற்ற வகையில் போராட நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம்.

நீதியும் நேர்மையும் மேலோங்கும் ஒரு தீவாக இலங்கையை எமது அடுத்த சந்ததிக்கு கையளிக்க நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

சமூக அபிவிருத்தி நிறுவகம் (ஐளெவவைரவந ழக ளுழஉயைட னுநஎநடழிஅநவெ) மனச்சாட்சிகள் மையங்கள் தொடர்பான சர்வதேச கூட்டமைப்புடன் (ஐவெநசயெவழையெட ஊழயடவைழைn ழக ளுவைநள ழக ஊழளெஉநைnஉந) இணைந்து இந்த செயலமர்வை நடத்தி வருகின்றது.

LEAVE A REPLY