கல்முனை நூலகங்கள் மாலை 6.00 மணி வரை இயங்கும்!

0
116

(அஸ்லம் எஸ்.மௌலானா)

bc68f4fe-7b20-4a48-811e-08d146ca1e32கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களின் வாசிப்பு பிரிவுகளை தினசரி மாலை 6.00 மணி வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாசகர்களின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி விடுத்த பணிப்புரைக்கமைவாக சம்மந்தப்பட்ட பொது நூலகங்களின் நூலகர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இதுவரை காலமும் மாலை 4.30 மணியுடன் மூடப்பட்டு வந்த கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் கரைவாகு மேற்கு ஆகிய நான்கு பொது நூலகங்களின் வாசிப்பு பிரிவுகளும் தினசரி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் என ஆணையாளர் தெரிவித்தார்.

இப்புதிய நேர அட்டவணை நேற்று திங்கடகிழமை (01) தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY