(Photo) தீ விபத்தில் வீடு தீக்கிரை: மட்டக்களப்பில் சம்பவம்

0
29

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

0d381910-7ed7-44fa-94f6-29e96f0c1f25மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 01, 2016) மாலை மணியளவில் எற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாக்கி சாம்பலாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல்லையா ஜீவரத்தினம் என்பவரின் வீடே எரிவாயு வெடித்ததில் வீடு எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளது.

தகவலறிந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் சுமார் 25 இற்கு மேற்பட்டோர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்து உயிர்ச் சேதம் ஏற்பாமல் காப்பாற்றியதாக களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி. அபூபக்கர் தெரிவித்தார்.

வீட்டிலுள்ள முக்கிய ஆவணங்கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளிரூட்டி உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், இச்சம்வம் தொடர்பில் பொலிஸார், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோர் இணைந்து விசாரணை செய்து வருகின்றனர்.

2a305e9c-2fe6-468c-a121-85ef1b2fe18c

6be139c5-5a69-4c46-b2ec-a77ba4c0f9c3

17b58a6c-8f1a-400d-8775-4a7d0d652361

361666a2-df6d-43dd-8707-70a849c2876c

ae2684fd-17ff-48ec-9a40-02466443a543

e6756a45-ef21-469d-bb19-34b2ec1bfaf9

LEAVE A REPLY