மொஹம்மத் ஹபீஸின் பந்துவீச்சு சோதனைக்காக விசேட பயிற்றுநரை நியமித்தது பாக். கிரிக்கெட் சபை

0
193

1833828பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹம்மத் ஹபீஸின் பந்­து ­வீச்சுப் பாணி சோத­னையை முன்­னிட்டு அவ­ருக்­கான விசேட பயிற்­று­நராக கார்ல் குரோவை பாகிஸ்தான் கிரிக் கெட் நிய­மித்­துள்­ளது.

பாகிஸ்தான் அணியின் சகல துறை வீர­ரான மொஹம்மத் ஹபீஸின் பந்­து­வீச்சுப் பாணி சட்­ட­வி­ரோ­த­மா­னது என ஐ.சி.சி. தெரி­வித்­துள்­ளது. அவர் தனது பந்­து­வீச்சுப் பாணியை சீராக்­கி­யுள்­ளதை சோதனை மூலம் நிரூ­பித்தால் மீண்டும் போட்­டி­களில் பந்­து­வீச முடியும்.

இந்­நி­லையில், இச்­சோ­த­னைக்கு முன்னால் மொஹம்மத் ஹபீ­ஸுக்கு பயிற்சி அளிப்­ப­தற்கு கார்ல் குரோவை பாகிஸ் தான் கிரிக்கெட் சபை நிய­மித்­துள்­ளது.

பிரிட்­டனை தள­மாகக் கொண்ட பந்­து­வீச்சுப் பயிற்­று­நரான கார்ல் குரோ பந்­து­வீச்சுப் பயிற்­றுநர் ஆவார். இவர் ஏற்­கெ­னவே, மேற்­கிந்­தியத் தீவுகள் வீரர் சுனில் நரை­னுக்குப் பயிற்­சி­ய­ளித்தார்.

அதன்பின் ஐ.சி.சி. சோத­னையில் சுனில் நரைன் வெற்றி பெற்றார். அதை­ய­டுத்து அவர் மீண்டும் பந்­து­வீ­சு­வ­தற்கு ஐ.சி.சி. அனு­ம­தித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

35 வய­தான மொஹம்மத் ஹபீஸ் அபு­தா­பியில் நடை­பெற்ற நியூ­ஸி­லாந்­து­ட­னான டெஸ்ட் போட்­டியின் போது, விதி­க­ளுக்கு முர­ணாக பந்­து­வீ­சு­வ­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

அவரின் பந்­து­வீச்சை ஆராய்ந்த விசா­ரணைக் குழு­வொன்று அவரின் பந்­து­ வீ­ச்சு சட்­ட­வி­ரோ­த­மா­னது என அறி­வித்­தது. அதை­ய­டுத்து மொஹம்மத் ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தற்கு ஐ.சி.சி. தடை விதித்­தது.

பின்னர் அவர் தனது பந்­து ­வீச்சுப் பாணியை சீராக்­கிக் ­கொண்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மீண்டும் பந்­து ­வீச ஆரம்­பித்தார்.

எனினும், கடந்த வருடம் காலியில் நடை­பெற்ற இலங்கை அணி­யு­ட­னான போட்­டி­யின்­போது அவரின் பந்­து­வீச்சு தொடர்பில் மீண் டும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

அதை­ய­டுத்து கடந்த வரு டம் மொஹம்மத் ஹபீஸ் பந்­து ­வீ­சு­வ­தற்கு ஐ.சி.சியி னால் ஒரு வருட கால தடை விதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் இங்கிலாந் துடனான ஒருநாள் தொடருக்கு முன்னதாக மொஹம்மத் ஹபீஸின் பந்து வீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதியைப் பெறுவதற்கு முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்புகிறது.

LEAVE A REPLY