சீனாவை மிரட்டும் நிடா புயல்: 150 கி.மீ. வேகத்தில் ஹாங்காங் நகரை சூறையாடியது – விமானச் சேவை பாதிப்பு

0
105

201608020934250994_Typhoon-Nida-shuts-Hong-Kong-more-than-150-flights-cancelled_SECVPFசீனாவை நோக்கி நகர்ந்துவரும் ’நிடா’ புயல் பலத்த மழையையும், வெள்ளப் பெருக்கையும் உண்டாக்கும் என நேற்று அறிவித்திருந்த சீன வானிலை ஆய்வு மையம் எட்டாம் எண் கொண்ட எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தன்னாட்சி உரிமம் கொண்ட ஹாங்காங் நகரை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்தப் புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.20 மணியளவில் பெருமழையுடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திய நிடா புயலால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான சாலைகள் மற்றும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. ஹாங்காங் நகரில் இருந்து சீனாவின் பிறபகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 300 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாக நடைபெற்று வருகிறது.

B8B2BCFF-9D91-499F-BA1F-F5BE6018ED07_L_styvpfஹாங்காங்கை பதம்பார்த்த பிறகு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகர்ந்துவரும் ’நிடா’ புயல் மெல்ல வலுவிழந்து வந்தாலும் அங்கும் மிகப்பெரிய பாதிப்பை அது உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY