பாகிஸ்தானில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 12 பேர் உயிரிழப்பு

0
86

accident-logoபாகிஸ்தானில் இன்று அதிகாலை லாரியுடன் பஸ் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான பஸ், டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை ஜம்ஷோரோ மாவட்டம் வழியாக சென்றபோது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் சென்ற 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY