ஊக்க மருந்து குற்றச்சாட்டிலிருந்து நர்சிங் யாதவ் விடுவிப்பு

0
91

160801110819_narsi_2955277hஊக்க மருந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர் நர்சிங் யாதவை இந்தியாவின் விளையாட்டு அதிகாரிகள் அதிலிருந்து விடுவித்துள்ளனர்.

மல்யுத்த வீரரான நர்சிங் யாதவ் முன்னர் இரண்டு ஊக்க மருந்து சோதனைகளில் தோல்வி அடைந்துள்ளார்.

ஆனால், மற்றொரு வீரர் வேண்டுமென்றே அவரது உணவில் ஏதோ ஒன்றை கலந்துவிட்டதாக அவர் கூறினார்.

சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், கலந்து கொள்ள தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார் யாதவ்.

LEAVE A REPLY