ஐ.நா.வின் இன ரீதியான அநீதி ஒழித்தல் அமர்வில் இலங்கை குறித்து மீளாய்வு

0
118

un1ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நாளை முதல் எதிர்­வரும் 28 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இன ரீதி­யான அநீ­தியை ஒழித்தல் தொடர்­பான கூட்டத் தொடரில் எதிர்­வரும் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த அமர்வில் இலங்­கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேர­வைக்­கான இலங்கை தூதுவர் ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­துடன் இலங்கை குறித்து எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளிக்­க­வுள்­ளனர்.

அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­களம் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சு ஆகி­ய­வற்றின் உயர் அதி­கா­ரி­களும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இன ரீதி­யான அநீ­தியை ஒழித்தல் தொடர்­பான குழுவில் 177 நாடுகள் அங்கம் வகிப்­ப­துடன் அதில் இலங்­கையும் இடம்­பெற்­றுள்­ளது.
இந்­நி­லையில் நாளை முதல் எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்­பான மீளாய்வு நடை­பெ­ற­வுள்­ளது.

அந்­த­வ­கையில் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்­பெறும்.

மேலும் சர்­வ­தேச மனித உரிமை நிறு­வ­னங்கள் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­தி­களும் சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்­ளனர்.

மேலும் இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

LEAVE A REPLY